Friday 13 May 2016

Pencil Review-indiaglitz


வெகு நாட்களாக தயாரிப்பில்
இருந்த 'பென்சில்' படம் ஜி வி
பிரகாஷ்குமாரின் அறிமுக படம்
என்பதால் மிகுந்த
எதிர்பார்ப்புகளுடன்
வெளிவந்திருகிறது. அறிமுக
இயக்குனர் மணி நாகராஜ் பள்ளியில்
நடக்கும் ஒரு கொலை மர்ம கதையை
கையில் எடுத்து ஓரளவுக்கு வெற்றியும்
கண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு
பன்னிரெண்டாம் வகுப்பு
மாணவனை ஒரு மர்ம நபர்
பென்சிலின் கூர்மையான
முனையினால் கழுத்தில் சரமாரியாக
குத்தி கொல்கிறான்.
பின்னோக்கி செல்லும் கதையில்
கொலை செய்யப்பட்ட
மாணவன் நிதின் (சாரிக் ஹசன்)
எல்லா கெட்ட குணங்களும்
கொண்ட, ஒரு சினிமா சூப்பர்
ஸ்டாரின் மகன் என்றும் அவனுக்கு நேர்
எதிர் குணம் கொண்ட நல்ல
பிள்ளை சிவா (ஜி வி
பிரகாஷ்குமார்)வுடன் சதா
பகைமையுடன் இருப்பதும் தெரிய
வருகிறது. சிவா, மாயா (ஸ்ரீ
திவ்யா) என்கிற சக மாணவியை ஒரு
தலையாய் காதலிக்க அவள் அவனை
அலட்சியப்படுத்துகிறாள்.
பள்ளி ஆசிரியர் ஒருவரும் அதே பள்ளியில்
வேலை செய்யும் டீச்சரும் காதலர்கள்
இருவரும் பள்ளி நீச்சல் குள
குளியலறையில் தப்பாக நடந்து
கொள்ள நிதின் அதை ரகசிய
காமிராவில் படம் பிடித்து பிளாக்
மெயில் செய்ய
ஆரம்பிக்கிறான். அதே போல பல சக
மாணவிகளுடனும் உல்லாசமாக
இருக்கும் வீடியோக்களை வைத்து மிரட்டி படிய
வைப்பது வாடிக்கை. இடைவேளையின் போது
சிவா தான் அவனை
கொன்றிருப்பான் என்று
சந்தேகம் வலுக்க அவன் மீது இப்போது
காதல் கொள்ளும் மாயா
யாரும் நிதினின் உடலை
பார்ப்பதற்குள்  உண்மையான
குற்றவாளியை கண்டுபிடிக்க புறப்பட
அது நடந்ததா என்பதே மீதி கதை.
முதல் படமாயிற்றே ஜி வி
சொதப்பியிருப்பார் என்று
நினைத்துகொண்டு அரங்கிற்குள்
செல்பவர்க்கு இன்ப அதிர்ச்சியாக
பள்ளி மாணவனின் உடம்புக்குள்
புகுந்தது போல இயல்பான நடிப்பை
பார்க்கமுடிகிறது. ஒரே குறை அவருக்கு
இந்த பென்சிலில் அதிக
வேலையில்லாமல் போனதுதான்.
'வருத்தபடாத வாலிபர் சங்கம்'
படத்தில் கிராமத்து பள்ளி
மாணவியாக கலக்கிய ஸ்ரீ திவ்யா
இதில் நகரத்து சீருடையில் சற்றே
முதிர்ச்சியாக தெரிகிறார்
ஆனாலும் தன்னுடைய வசீகர
முகபாவனையால் சமாளிக்கிறார்.
ரியாஸ் கான் மற்றும் உமா
ரியாஸ் கான் தம்பதியரின் மகன்
சாரிக் ஹசன் வில்லத்தனத்தில்
மின்னுகிறார் வரவேற்கபடவேண்டிய
நல்ல அறிமுகம். சாரிக்கால்
அந்தரங்க வீடியோ வைத்து மிரட்டப்படும்
பள்ளி ஆசிரியையாக வரும் சுஜா வருணீ
நல்ல நடிப்பை
வெளிபடுதியிருகிறார். ஊர்வசி, வி
டி வி கணேஷ், டி பி கஜேந்திரன் மற்றும்
அபிஷேக்  போன்ற பண்பட்ட நடிகர்கள்
கொடுத்த வேலையை சரியாக
செய்துள்ளனர். ஜி வியின்
நண்பனாக வரும் பையன் காமடிக்கு
அவ்வப்போது உதவுகிறான்.
ஜி வி பிரகாஷின் பின்னணி இசை
படத்துக்கு பெரிய பலம் ஆனால்
பாடல்கள் அவ்வளவாக
கவரவில்லை. கோபி அமர்நாத்தின்
காமிரா மற்றும் ஆண்டனியின்
எடிட்டிங் சிறப்பு. அறிமுக இயக்குனர்
மணி நாகராஜ் தமிழில்
அவ்வளவாக பார்த்திராத கதை
களத்தைக் கையில் எடுத்து முக்கால்வாசி
படத்தை விறுவிறுப்புடன் தந்திருக்கிறார்.
பள்ளி மாணவியான ஸ்ரீ திவ்யா
கதைபுத்தகங்கள் படித்த அனுபவத்தில்
கொலையாளியை கண்டுபிடிக்க
எடுக்கும் முயற்சிகள் நம்பும்படியாக
இல்லை. மேலும் அதுவரை சீராக
சென்றுகொண்டிருக்கும்
திரைக்கதை அதற்கு பிறகு லாஜிக்
மீறல்களால் அடிவாங்குகிறது.
இடையில் சமுத்திரகனி பாணியில்
தனியார் பள்ளிகளை சாடுவதும் இந்த
கதைக்கு பலம் சேர்ப்பதை விட
சறுக்கலாகவே திகழ்கின்றன. கடைசியில்
நிஜ கொலையாளி
யாரென்பதும்
கொலைக்கான காரணமும்
மனதை பாதிக்கவில்லை .
குறைகள் இருந்தாலும் பென்சில்லில்
கூர்மை இருப்பதால் ஒரு முறை
தாராளமாக பார்க்கலாம்.
Rating : 2.8 / 5.0

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...