Monday 2 May 2016

சிம்புவின் 'இது நம்ம ஆளு'. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு


சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு கடந்த சில மாதங்களாக தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய மே தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் 'சத்தியமா மே 20-ல் வர்றோம்' என்று விளம்பர செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ சினிமா வளாகத்தில் 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டதால் மே 20-ல் இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தை டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதே தேதியில்தான் விஷாலின் 'மருது' திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...