Saturday, 14 May 2016

சென்னையில் 2 .0 படப்பிடிப்பு


டெல்லி ஷெட்யூல்டை முடித்த
2.0 படக்குழு இன்றுமுதல்
சென்னையில் படப்பிடிப்பை
தொடங்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா
பிரமாண்டமாக தயாரித்துவரும்
படம், 2.0. எந்திரன் படத்தின்
இரண்டாம் பாகமாக
தயாராகிவரும் இந்தப் படத்தில்
அக்ஷய் குமார் வில்லனாக
நடிக்கிறார்.
அவர் சிட்டி ரோபோவாக ரஜினி
நடித்தது போல், வில்லனால்
உருவாக்கப்படும் ரோபோவாக
நடிக்கிறார். படத்தின்
கிளைமாக்ஸ் சண்டைக்
காட்சியை டெல்லி
மைதானத்தில் சமீபத்தில்
படமாக்கினர்.
2.0 படத்தின் அடுத்தப்பட்ட
படப்பிடிப்பு சென்னையில்
இன்று தொடங்கியது. இதற்காக
நேற்றே சென்னை வந்தார்
அக்ஷய் குமார்.
முப்பது நாள்களுக்கு மேல்
நடைபெற இருக்கும் இந்த
ஷெட்யூல்டில் ஆக்ஷன் காட்சி
மற்றும் டாக்கி போர்ஷன்கள்
எடுக்கப்பட உள்ளன. சென்னை
ஷெட்யூல்ட் முடிந்ததும்
மொராக்கோ மற்றும்
பொலிவியாவுக்கு செல்ல
படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...