Friday 6 May 2016

நினைவுகளை இழந்தவர் கபாலியால் மீண்டு வந்த அதிசயம்…!

நினைவுகளை இழந்தவர் கபாலியால் மீண்டு வந்த அதிசயம்…!ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்போது அத்தனை ரசிகர்களையும் படம் பற்றி ஆவலாய் அறிய இழுப்பது அப்படத்தின் போஸ்டர்கள்தான்.
இதுபோல்தான் கபாலி படத்தின் போஸ்டர் டிசைன்களும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இதற்கு காரணமானவர் சென்னையை சேர்ந்த வின்சி ராஜ் என்பவர்தான்.
இவர் அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களுக்கும் போஸ்டர் டிசைன் செய்துள்ளார்.
பிசிஏ படித்துவிட்டு, விஸ்காம், டிஜிட்டல் கம்யூனிகேஷனில் முதுகலைப் பட்டம் வென்ற இவர் விளம்பரத் துறையில் பணியாற்றி இருக்கிறார்.
இவருடைய ‘டாக் தெம் டெட்’ என்ற விளம்பர டிசைன் உலகளவில் சென்ற நூற்றாண்டில் சிறந்த 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இதனிடையில், ஒரு விபத்தில் தன் நினைவுகளை 70% இழந்து படுத்த படுக்கையாகி விட்டாராம்.
அதன்பின்னர் கொஞ்ச கொஞ்சமாக இவருக்கு நினைவுகள் திரும்பியதாம். இதனால் மறுபடியும் ஃபோட்டோஷாப் முதல் அத்தனை டிசைன் சாஃப்ட்வேர்களையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
அதன்பின்னர் கபாலி படத்திற்காக மீண்டும் ரஞ்சித் இவரை நாடி வந்திருக்கிறார்.
அதன்பின்னரும் காலஅவகாசம் கேட்டு, கபாலி பட போஸ்டர்களை உருவாக்கி இருக்கிறார்.
தீவிர ரஜினி ரசிகரான இவர் கபாலிக்காக நிறைய டிசைன்களை செய்து அதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறாராம்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...