Wednesday 4 May 2016

மே இறுதியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ இசை !

Image result for siva remoசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘ரெமோ’ படத்தின் இசை வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.
‘ரஜினிமுருகன்’ வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அனிருத் இசையில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பாடல்களில் ஒரு பாடல் மட்டும் முடிக்காமல் இருந்த நிலையில் விரைவில் அனிருத் அந்த பாடலை முடித்துக் கொடுக்க இருக்கிறார். இதனால் தேர்தல் முடிந்தவுடன் மே மாத இறுதியில் ‘ரெமோ’ இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...