Tuesday 24 May 2016

அந்தமானில் ஜெயம்ரவி - விஜய்யின் அதிரட

‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் தற்போது ‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, தனது 21வது படத்தில் இயக்குனர் விஜய்யுடன் இணைகிறார். அப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், அப்படம் குறித்த மேலும் சில தகவல்களும் தற்போது வெளிவந்திருக்கின்றன.தற்போது விஜய் இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா, தமன்னாவின் ‘அபினேத்ரி’ படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவி படத்தை ஆகஸ்ட் முதல் இயக்கவிருக்கிறார். இப்படம் ஆக்ஷன், ரொமான்ஸ் படமாக உருவாகவிருக்கிறதாம். காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலும், ஆக்ஷன் பகுதிகளுக்கான படப்பிடிப்பை அந்தமான் தீவிலும் நடத்தவிருக்கிறார்களாம். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர், இதுவரை அவர் செய்திராத வகையில் புதுவிதமாக இருக்கும் என்றும் கூறுகிறது விஜய்வட்டாரம்.

சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் தந்த ‘AYM’ டீம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே இருந்தது. ஒருவழியாக படம் சம்பந்தப்பட்ட அத்தனை சிக்கல்களையும் தீர்த்து தற்போது வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது. இதனால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். அவர்களுக்கு மேலும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள் ‘அச்சம் என்பது மடமையடா’ படக்குழுவினர்.கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவரின் இசையில் உருவான ‘தள்ளிப்போகாதே...’ படத்தின் லிரிக் வீடியோவை ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸ் செய்தார்கள். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் இதுவரை 1 கோடி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை இதுவரை பார்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது இப்படத்தின் இன்னொரு பாடலான ‘ராசாலி...’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை மே 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்கள்.இந்த செய்தியை வெளியிட்ட ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஒன்ராக என்டர்டெயின்மென்ட்’ தற்போது மேலும் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. ஆம்... இப்படத்தின் பாடல்களை ஜூன் 17ஆம் தேதி வெளியிடவிருப்பதாகவும், ஜூலை 15ஆம் தேதி படம் உலகமெங்கும் ரிலீஸாகவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.ஒரே நேரத்தில் சிம்பு படங்கள் குறித்த அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷ அதிர்ச்சியில் உள்ளனர் எஸ்டிஆர் ரச

விஷ்ணு விஷாலின் ‘VVV’ படமும், 10-வது பட பொருத்தமும்!

‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால், முதன் முதலாக நடித்திருக்கும் ஒரு முழு நீள கமர்ஷியல் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிற இப்படத்தை எழில் இயக்கியிருக்கிறார். எழிலும். விஷ்ணு விஷாலும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கு சத்யா இசை அமைத்துள்ளார். வழக்கமாக எழில் இயக்கும் படங்களுக்கு டி.இமான் தான் இசை அமைப்பார். ஆனால் இப்படத்தின் மூலம் எழிலும், சத்யாவும் முதன் முதலாக இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் இணைந்துள்ள விஷ்ணு விஷால், எழில், சத்யா மூவருக்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் தங்களது 10-ஆவது படமாக அமைந்துள்ளது. இன்று நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசும்போது,‘‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’ என என் மனதுக்கு பிடித்த மாறுபட்ட கதைகளில் தான் இதுவரை நடித்துள்ளேன். முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் அல்லது ஒரு ஆக்‌ஷன் கதையில் நான் இது வரை நடித்ததில்லை. எழில் சார் இயக்கத்தில் முதன் முதலாக முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடித்துள்ளேன். முதலில் இந்த கதையை வேறு ஒரு தயாரிப்பாளர் தான் தயாரிக்கவிருந்தார். ஆனால் அவர் திடீரென்றுவிலகியதால் இந்த கதை மீதுள்ள நம்பிக்கையில் நான் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆனேன். நடிப்பில் எது எனது 10 ஆவது படம்! தயாரிப்பில் எனக்கு இது முதல் படம்! ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஆறு வருட கால போராட்டத்திறிகு பிறகு தான் நடிகன் ஆனேன். முதல் படத்திலிருந்து இதுவரையிலான என்னோட வளர்ச்சியில் மீடியாவை சேர்ந்த அனைவருக்கும் பங்கு உண்டு! ஒரு நடிகன் என்றில்லாமல் இப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் எல்லோரும் தந்த ஆதரவு தான்! கடந்த வருடம் என் பிறந்த நாளை உங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தேன்! அன்றிலிர்நுது எல்லாம் நல்ல படியாக போய் கொண்டிருக்கிறது. எழில் சார் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் நான் ஒரு தயாரிப்பாளராகவும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜூன் 3-ஆம் தேதி இப்படம் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது. உங்களுக்கு படம் பிடித்தால் நன்றாகஇருக்கிறது என்று எழுதுங்கள்’’ என்றார் விஷ்ணு விஷால்!சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கியுள்ள ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக, போலீஸ் அதிகாரியாக நிக்கில் கல்ராணி நடிக்க, முக்கிய கேரக்டர்களில் சூரி, ரவி மரியா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித

Monday 23 May 2016

ஜூலையில் வெளிவருகிறது விஜய் ஆண்டனியின் “சைத்தான்”..!!

நான், சலீம், பிச்சைக்காரன் என வெற்றி படங்களை மட்டும் தந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படைப்பாக வருகிறது “சைத்தான்”. இயக்குனர் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றுவெளியானது.இது ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறாராம். படத்தினை ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெள

தனுஷ் படத்தை கைவிடுகிறார் கெளதம் மேனன்?


பிரபல இயக்குனர் கெளதம்மேனன் தற்போது
சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது
மடமையடா' மற்றும் தனுஷ் நடித்து வரும் 'எனை
நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை ஒரே
நேரத்தில் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் படத்தில் அவர்
வில்லனாக நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு
முன்னர் தகவல் வந்தது. ஆனால் தற்போது
இரு படங்களின் பணிகளில் அவர் பிசியாக
இருப்பதால் தனுஷ் படத்தின் வில்லன்
கேரக்டரில் நடிக்கும் முடிவை கைவிட்டுள்ளதாக
தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருக்கு பதில்
வேறொரு நடிகர் அந்த கேரக்டரில்
நடிக்கவுள்ளார்.
தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில்
தனுஷ் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில்
நடிக்கவுள்ளதாகவும், இதில் ஒரு கெட்டப்பின்
படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னொரு
கெட்டப்பின் படப்பிடிப்பு விரைவில்
தொடங்கவுள்ளதாக படக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.

200-ல் ஒருவராவது ரஜினிக்கு பொருந்துவாரா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி'
படம் 'மலாய்' மொழியில் டப் செய்யப்படவுள்ளது
என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் மலாய் மொழிக்கான டப்பிங்
பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரஜினிக்கு
குரல் கொடுக்க சுமார் 200 மலாய் டப்பிங்
கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 200 பேர்களில் ஒருவரை தேர்வு செய்து
அவரை டப்பிங் செய்யும் பணி
நடைபெறவுள்ளதாம். அந்த அதிர்ஷ்டசாலி யார்
என்பது இன்னும் ஓரிரு நாட்களில்
வெளியாகிவிடும் என தெரிகிறது.

ஏ.எல்.விஜய்யுடன் முதல்முறையாக இணையும் ஜெயம் ரவி


மதராசபட்டிணம், தாண்டவம், தலைவா, இது
என்ன மாயம் உள்பட பல வெற்றி படங்களை
கொடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்
முதன்முதலாக ஜெயம் ரவியுடன் இணைகிறார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்
நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு
தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஜெயம் ரவி
கூறியதாவது: இயக்குனர் ஏ.எல்.விஜய்யின்
ஸ்டைலும் எனது நடிப்பும் மிகப்பொருத்தமாக
இருக்கும் என நான் பலமுறை கருதியதுண்டு.
ஆனால் இருவரும் இணைய காலநேரம் இதுவரை
ஒன்றிணைந்து வரவில்லை. தற்போது இருவரும்
இணையும் காலம் வந்துள்ளதால் இதை மிஸ்
செய்ய இருவருமே விரும்பவில்லை' என்று
கூறியுள்ளர்.
ஆக்சன் மற்றும் எமோஷனல் படமாக
உருவாகவுள்ள இந்த படம் குறித்த மற்ற
தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது. ஜெயம்
ரவி தற்போது 'போகன்' என்ற படத்தில் நடித்து
வருகிறார். ஏற்கனவே ஜெயம் ரவியை இயக்க
கவுதம் மேனன், மோகன் ராஜா, சுசீந்திரன், சக்தி
செளந்திரராஜன் ஆகியோர் தயார் நிலையில்
இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள்
வரிசையில் தற்போது ஏ.எல்.விஜய்யும்
இணைந்துள்ளார்.

Monday 16 May 2016

நீண்ட யோசனையுடன் வாக்களித்த விஜய்


சட்டமன்ற தேர்தலுக்கான
வாக்குப்பதிவு இன்று காலை 7
மணிக்கு தொடங்கியது.
தொடங்கிய நேரம் முதல் பல்வேறு
நடிகர், நடிகைகளும் தங்களது
வாக்கை பதிவு செய்து
வருகின்றனர். அஜித், ரஜினி
ஆகியோர் காலையிலேயே முதல்
ஆளாக வந்து தங்களது வாக்கை
பதிவு செய்தனர்.
மேலும், பல நடிகர், நடிகையரும்
தங்களது வாக்கை தொடர்ந்து
பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் தனது
வாக்கை பதிவு செய்ய
நீலாங்கரையில் உள்ள
வாக்குச்சாவடி மையத்துக்கு
காலை 10.45 மணிக்கு வருகை
தந்தார். அவரை பார்ப்பதற்கும்,
புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள்
கூட்டம் முண்டியடித்தது.

விஜய்யுடன் மீண்டும் இணைந்த எமி ஜாக்ஸன்


தமிழ் சினிமாவில்
மதராசப்பட்டினம் படத்தின் மூலம்
அறிமுகமானவர் எமி
ஜாக்சன்.அடுத்ததாக விக்ரம் நடித்த
தாண்டவம் படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படத்தையும்
ஏ.எல்.விஜய் தான்
இயக்கியிருந்தார்.இதன்பின்னர்
எமி ஜாக்சன் ஐ, தெறி, 2.0 போன்ற
பிரமாண்ட படங்களில் நடிக்க
ஆரம்பித்துவிட்டார்.
தற்போது மூன்றாவது
முறையாக மீண்டும்
ஏ.எல்.விஜய்யுடன்
இணைந்துள்ளார். பிரபுதேவா,
தமன்னாவை வைத்து தற்போது
காந்தா என்ற படத்தை விஜய்
இயக்கி வருகிறார்.
இப்படத்தில் தான் எமி முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளாராம். இதில்
பிரபுதேவாவுடன் ஒரு
பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.
இதை தன் டிவிட்டர் பக்கத்திலும்
பகிர்ந்துள்ளார்.

முதல் ஆளாக ஓட்டுப்போட்டார் சூப்பர்ஸ்டார


தமிழ் சினிமாவின் உச்ச
நட்சத்திரமாக விளங்குபவர்
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்.சமீபத்தில் வந்த
இவரின் கபாலி படைத்துவரும்
சாதனையை பற்றி நாம் சொல்லித்
தெரிய வேண்டியதில்லை.
இவர் இன்று நடைபெற்றுவரும்
சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு
தொடங்கிய சில
நிமிடங்களிலேயே
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
முதல் நட்சத்திரமாக தனது
வாக்கை பதிவு செய்துவிட்டார்.

கடமையை நிறைவேற்றி விட்டேன்: வாக்களித்தபின் நடிகை திரிஷா பேட்டி

சென்னையில் இன்று
வாக்களித்த நடிகை திரிஷா,
தனது கடமையை
நிறைவேற்றியிருப்பதாக
பெருமிதத்துடன் கூறினார்.
சென்னையில் இன்று
வாக்களித்த நடிகை திரிஷா,
தனது கடமையை
நிறைவேற்றியிருப்பதாக
பெருமிதத்துடன் கூறினார்.
தமிழக சட்டமன்றத்
தேர்தலுக்கான
வாக்குப்பதிவு இன்று காலை
7 மணி முதல் விறுவிறுப்பாக
நடைபெற்று வரும் நிலையில்,
திரையுலக பிரபலங்கள் தங்கள்
வாக்குச்சாவடிகளுக்கு
சென்று வாக்களித்து
வருகின்றனர். ரஜினிகாந்த்,
அஜித், விஜய் ஆகியோர்
காலையிலேயே தங்கள்
வாக்குகளை பதிவு செய்தனர்.
நடிகை திரிஷா
கோட்டூர்புரத்தில் உள்ள
வாக்குச்சாவடியில் தனது
வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர்,
தனது கடமையை
நிறைவேற்றியுள்ளதாகவும்,
அனைவரும் வாக்களிக்க
வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.

Sunday 15 May 2016

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா


தமிழ் சினிமாவில் முன்னணி
நடிகையாக வலம் வருபவர் திரிஷா.
இவர் தற்போது ‘நாயகி’ என்னும் படத்தில்
நடித்து வருகிறார். இதில் முதல்
முறையாக வித்தியாசமான இரட்டை
வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி
வருகிறது. கணேஷ் வெங்கட்ராமன்
முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை
திரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்து
வருகிறார். கோவி இயக்கி வருகிறார்.
இப்படத்தை அடுத்து விஜய்யை வைத்து ‘மதுர’
படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கத்தில்
திரிஷா நடிக்க இருக்கிறார். இதிலும்
திரிஷா இரண்டு வேடங்களில் நடிக்க
இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து
இரண்டு படங்களில் இரட்டை வேடத்தில்
நடிப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
இப்படங்களை தவிர, விஜய் சேதுபதியுடன்
‘காத்துவாக்குல இரண்டு காதல்’
படத்திலும் நடிக்க இருப்பதாக
கூறப்படுகிறது.

சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் : கீர்த்தி சுரேஷ்


ரஜினி முருகன் வெற்றிக்குப்பிறகு
தமிழ் திரை உலகில் முக்கிய இடம்
பிடித்திருப்பவர் கீர்த்திசுரேஷ். இரண்டு
படங்களில் நடிப்பதற்குள் விஜய், தனுஷ்
ஆகியோருடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது
எப்படி? என்பது குறித்து கீர்த்தி சுரேசிடம்
கேட்ட போது….
“எல்லாம் கடவுள் செயல். நாளை
என்ன நடக்கும் என்று யோசிக்க மாட்டேன்.
இன்று என்ன செய்ய முடியுமோ அதை
நன்றாக செய்ய நினைப்பேன்.
‘ரஜினி முருகன்’ என் திரையுலக வாழ்வில்
மிகவும் முக்கியமான படம். கேரளாவில்
கூட இந்த படம் மிகவும் பேசப்பட்டது.
விஜய், தனுஷ் படங்களில் நடிக்க எனக்கு
வாய்ப்பு கிடைத்தது பற்றி எனக்கு நானே
பெருமைப்பட்டுக் கொள்ள
முடியாது. மலேசியாவில் இயக்குனர்
பிரபுசாலமன் என்னை சந்தித்தார்.
அப்போது தனுஷ் ஜோடியாக
தொடரி படத்தில் நடிக்க
முடியுமா என்று கேட்டார். மிகவும்
மகிழ்ச்சி அடைந்தேன். அந்த படப்பிடிப்பு
திட்டமிட்ட காலத்தில் முடிவடைந்து விட்டது.
நிச்சயம் அது வெற்றிப்படமாக
அமையும்.
விஜய் சாருடனும் நடிக்கவும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. இந்த படப்பிடிப்பு
தொடங்கி விட்டது. இதில் நான்
நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக
இருக்கின்றன.
இந்த வாய்ப்புகள் அனைத்தையும் கடவுள்
கொடுத்ததாகவே நினைக்கிறேன்.
எனது அம்மா சொன்னபடி
நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும்
மரியாதை கொடுக்கிறேன். கதை
கேட்டு அம்மாவிடம் சொல்வேன்
என்றாலும், எனக்கு பிடித்த கதையில் நீ
நடி என்று தான் அம்மா
சொல்லுவார்.
நான் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக
கூறுவது தவறு. ஏற்கனவே வாங்கிய
சம்பளத்தை விட குறையாமல்
தயாரிப்பாளருக்கும் எனக்கும் திருப்தி
அளிக்கும் வகையில் தான் சம்பளம்
வாங்குகிறேன்.
என் அம்மா தமிழ், அப்பா
மலையாளம், நான் வளர்ந்த இடம்
கேரளா, தமிழகம் வாழவைக்கும் இடம்.
கேரளாவை விட எனக்கு சென்னையில்
தான் நண்பர்கள் அதிகம். தமிழ்
சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க
வேண்டும் என்பது என்
விருப்பம்”என்றார்.

தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு தேதி அறிவிப்பு


தனுஷ் நடிப்பில் ‘தொடரி’
மற்றும் ‘கொடி’ ஆகிய இரண்டு
படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது
ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தனுஷ் தற்போது கவுதம் மேனன்
இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும்
தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக
நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்தவுடன் கார்த்திக்
சுப்புராஜின் இயக்கத்தில் நடிப்பார்
என கூறப்பட்டது. இதனால்
வெற்றிமாறன் இயக்கத்தில்
தனுஷ் நடிக்க இருக்கும் ‘வட
சென்னை’ படம் அடுத்த வருடம்
தொடங்கும் என செய்தி
வெளியானது. ஆனால் தற்போது
இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
தகவல் வந்துள்ளது.
‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பை
வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல்
தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்த பிறகுதான்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்
தனுஷ் நடிக்க இருக்கிறார்.
‘வடசென்னை’ படத்தில் தனுஷூக்கு
ஜோடியாக சமந்தா மற்றும்
ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார்கள்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்
நிறுவனம் தயாரிக்கவுள்ள
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கவுள்ளார்.

Saturday 14 May 2016

சூர்யா 100 கோடி கிளப்பில் இணைந்ததாரா? 24 படத்தின் மொத்த வசூல் விவரம


சூர்யா நடித்த 24 படம் உலகம்
முழுவதும் நல்ல வரவேற்பு
பெற்றுள்ளது. இந்நிலையில்
இப்படம் ரூ 100 கோடி கிளப்பில்
இணைந்ததாக சிலர் கூறினர்.
ஆனால், விசாரிக்கையில்
இப்படம் ரூ 80 கோடி வரை
தற்போது வசூல்
செய்துவிட்டதாகவும், இன்னும்
சில நாட்களில் இப்படம் ரூ 100
கோடி வசூலில்
இணைந்துவிடுமாம்.
இதற்கு முன் சூர்யா நடித்த
சிங்கம்-2 படமே ரூ 100 கோடி
வசூல் செய்தது
குறிப்பிடத்தக்கது.

சூர்யா 100 கோடி கிளப்பில் இணைந்ததாரா? 24 படத்தின் மொத்த வசூல் விவரம


சூர்யா நடித்த 24 படம் உலகம்
முழுவதும் நல்ல வரவேற்பு
பெற்றுள்ளது. இந்நிலையில்
இப்படம் ரூ 100 கோடி கிளப்பில்
இணைந்ததாக சிலர் கூறினர்.
ஆனால், விசாரிக்கையில்
இப்படம் ரூ 80 கோடி வரை
தற்போது வசூல்
செய்துவிட்டதாகவும், இன்னும்
சில நாட்களில் இப்படம் ரூ 100
கோடி வசூலில்
இணைந்துவிடுமாம்.
இதற்கு முன் சூர்யா நடித்த
சிங்கம்-2 படமே ரூ 100 கோடி
வசூல் செய்தது
குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 2 .0 படப்பிடிப்பு


டெல்லி ஷெட்யூல்டை முடித்த
2.0 படக்குழு இன்றுமுதல்
சென்னையில் படப்பிடிப்பை
தொடங்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா
பிரமாண்டமாக தயாரித்துவரும்
படம், 2.0. எந்திரன் படத்தின்
இரண்டாம் பாகமாக
தயாராகிவரும் இந்தப் படத்தில்
அக்ஷய் குமார் வில்லனாக
நடிக்கிறார்.
அவர் சிட்டி ரோபோவாக ரஜினி
நடித்தது போல், வில்லனால்
உருவாக்கப்படும் ரோபோவாக
நடிக்கிறார். படத்தின்
கிளைமாக்ஸ் சண்டைக்
காட்சியை டெல்லி
மைதானத்தில் சமீபத்தில்
படமாக்கினர்.
2.0 படத்தின் அடுத்தப்பட்ட
படப்பிடிப்பு சென்னையில்
இன்று தொடங்கியது. இதற்காக
நேற்றே சென்னை வந்தார்
அக்ஷய் குமார்.
முப்பது நாள்களுக்கு மேல்
நடைபெற இருக்கும் இந்த
ஷெட்யூல்டில் ஆக்ஷன் காட்சி
மற்றும் டாக்கி போர்ஷன்கள்
எடுக்கப்பட உள்ளன. சென்னை
ஷெட்யூல்ட் முடிந்ததும்
மொராக்கோ மற்றும்
பொலிவியாவுக்கு செல்ல
படக்குழு திட்டமிட்டுள்ளது.

மிருதன் இனிமேல் திருடன்


ஜெயம் ரவியை வைத்து
மிருதன் படத்தை இயக்கிய சக்தி
சௌந்தர்ராஜன் மீண்டும் ஜெயம்
ரவியை இயக்குகிறார்.
இந்தப் படம் மிருதனைப்
போன்று வித்தியாசமான
கதைக்களத்தில் தயாராகிறது.
வட சென்னை பகுதியில்
வசிக்கும் திருடனாக இதில்
ஜெயம் ரவி வருகிறார். படத்தின்
இரண்டாம் பகுதியில் அவர்
விண்வெளிக்கு செல்வதாக
கதை புனையப்பட்டுள்ளது.
தற்போது போகன் படத்தில்
நடித்து வரும் ஜெயம் ரவி அது
முடிந்ததும் சக்தி
சௌந்தர்ராஜன் இயக்கத்தில்
நடிப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2 – ரஜினி வெளியே வடிவேலு உள்ளே


பி.வாசு இயக்கத்தில்
உருவாகவிருக்கும் சந்திரமுகி
2 படத்தில் ரஜினி
நடிக்கவில்லை. அதேநேரம்,
சந்திரமுகியில் ரஜினியுடன்
நடித்த வடிவேலு சந்திரமுகி 2
படத்தில் முக்கிய வேடத்தில்
நடிக்கிறார்.
கன்னடத்தில் தனது இயக்கத்தில்
வெளிவந்து வெற்றி பெற்ற
சிவலிங்கா படத்தை தமிழில்
ரஜினி நடிப்பில் சந்திரமுகி 2
ஆக எடுக்க பி.வாசு
திட்டமிட்டார்.
ஆனால், ரஜினி அதில் ஆர்வம்
காட்டவில்லை. அதனால்
ரஜினிக்குப் பதில் லாரன்ஸை
வைத்து சிவலிங்காவை
தமிழில் ரீமேக் செய்கிறார்.
படத்துக்கு சந்திரமுகி 2 என
பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சந்திரமுகியில்
காமெடிக் காட்சியில் கலக்கிய
வடிவேலு முக்கிய வேடத்தில்
நடிக்க உள்ளார்.
பிற விவரங்களை விரைவில்
அறிவிக்க உள்ளனர்.

Friday 13 May 2016

மீண்டும் சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா


பாபி சிம்ஹா நாயகனாக
நடித்துள்ள கோ 2 படத்தை
இயக்கியிருப்பவர் சரத்.
அரசியல் படமான கோ 2 -வைத்
தொடர்ந்து சரத் இயக்கும்
படத்திலும் பாபி சிம்ஹாவே
நாயகனாக நடிக்க உள்ளார்.
கோ 2 அரசியல் படம் என்பதால்
படம் எந்தக் கட்சிக்கு, எந்த
தலைவருக்கு ஆதரவாக
இருக்கும், எந்த கட்சியை,
தலைவரை எதிர்க்கும் என்ற
கேள்வி எழுந்துள்ளது. அதற்கு
பதிலளித்த சரத், கோ 2
யாரையும் தனிப்பட்ட
முறையில் விமர்சிக்காது,
யாருக்கும் எதிரான படமில்லை
இது என்றார்.
கோ 2 படத்தில் பிரகாஷ்ராஜ்
முதலமைச்சராக நடித்துள்ளார்.
அதிக முக்கியத்தும் தரப்பட்டு
இந்த கதாபாத்திரம்
உருவாக்கப்பட்டுள்ளது.

மருதுவில் சாதி துவேஷ வசனங்கள்…? வரி விலக்கு கட்…


குட்டிப்புலி என்ற முதல்
படத்திலேயே, தேவர் சாதி
பெருமை பேசுகிறவர் என்ற
அவப்பெயரை பெற்றவர்,
இயக்குனர் முத்தையா.
அவரது இயக்கத்தில் வெளிவந்த
கொம்பனும் தேவர் சாதியின்
வறட்டு குணாம்சங்களை
பிரஸ்தாபிப்பதாகவே
இருந்தது.
அவரது மூன்றாவது படம்,
மருது. இதிலும் சாதி
அபிமான, துவேஷ வசனங்கள்,
காட்சிகள் இருப்பதாக முன்பே
கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், படத்தைப் பார்த்த
தணிக்கைக்குழுவினர் பல
காட்சிகளுக்கும்,
வசனங்களுக்கும் எதிர்ப்பு
தெரிவித்து கத்தரித்துள்ளனர்.
அத்துடன் யுஏ சான்றிதழே
அளித்துள்ளனர். அதனால்
வரிவிலக்கு பெறும்
தகுதியை மருது
இழந்துள்ளது.
மருதுவில் விஷால், ஸ்ரீதிவ்யா
நடிக்க, கோபுரம் ஃபிலிம்ஸ்
அன்புசெழியன் படத்தை
தயாரித்துள்ளார். மே 20 படம்
திரைக்கு வருகிறது.

KO 2 -Review Indiaglitz


2014ல் வெளியான
;ஜிகர்தண்டா’ படத்தின்
வெற்றிக்குப் கதாநாயக
அந்தஸ்தைப் பெற்ற பிறகு நடிகர்
பாபி சிம்ஹா முதல் அரசியல்
படமான ‘கோ 2’
வெளியாகியிருக்கிறது. 2011ல்
வெளியான ‘கோ’ படத்துக்கு
இதற்கும் கதையளவில் எந்த சம்பந்தமும்
இல்லை. ஆனால் தலைப்பில் இருக்கும் ‘கோ’
என்ற வார்த்தையும் இதுவும் ஒரு
அரசியல் படம் என்பதும் எதிர்பார்ப்பை
எகிற வைத்திருக்கிறது. எகிறிய
எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று
பார்ப்போம்.
குமரன் (பாபி சிம்ஹா) தமிழக
முதல்வரை (பிரகாஷ் ராஜ்) ஒரு முதியோர்
இல்ல திறப்பு விழாவுக்கு வரவைத்து
கடத்திவிடுகிறார். அதன்பின் அரசு,
காவல்துறையிடம் பேச்சுவார்த்தை
நடத்துகிறார். அவர் வைக்கும் கோரிக்கைகள்
ஏற்கப்பட்டனவா? முதல்வருக்கு என்ன
ஆனது? குமரனின் பின்னணி என்ன?
அவர் ஏன் இச்செயலைச்
செய்தார்? இந்தக்
கேள்விகளுக்கான பதில்களை திரையில்
தெரிந்துகொள்ளுங்கள்.
அரசியல் தொடர்பான கதைகளை
வைத்துப் படமெடுப்பதில் ஒரு நன்மை
உண்டு. மக்களை தினம் தினம்
பாதிக்கும், அவர்கள் கடந்து
செல்லும் விஷயங்களைப் பேசலாம்.
இதனால் பார்வையாளர்கள்
படத்துடன் எளிதாக
ஒட்டிக்கொண்டுவிடுவார்கள்.
இதை சரியாக செய்யத்
தவறினால் அதோகதிதான். ஆனால்
அறிமுக இயக்குனர் ஷரத், பாக்கியம்
சங்கர் மற்றும் ராஜாராம்
ஆகியோரின் பொறிபறக்கும்
வசனங்களின் துணையுடன் இந்த
அம்சத்தில் திருப்திபடுத்திவிட்டார்.
படத்தில் காண்பிக்கப்படும், பேசப்படும்
அரசியல் மற்றும் பொது
விவகாரங்கள் அனைத்தும்
சமகாலத்தன்மை வாய்ந்தவை.
மதுவால் விளையும் தீமைகள்,
விவசாயிகள் தற்கொலை,
மணற்கொள்ளை, கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும்
பொதுச் சொத்துகள்,
என அனைத்துமே நாம் அனுதினமும்
கடந்து செல்பவை.
அரசியல்வாதிகள் பணபலத்தால்
தேர்தல் முடிவுகளை மாற்றுவது, ஒரு
முதல்வருக்கு ஏதாவது நடந்தால்
மாநிலமே சமூக விரோதிகள் கையில்
அகப்பட்டு ஸ்தம்பித்துப் போவது என்பன
போன்ற விவகாரங்கள் அண்மைக்
காலத்தில் நடந்தவை.
முதல்வர் கடத்தலுக்கு பின்னால் உள்ள
கதை இரண்டாம் பாதியின்
பிற்பகுதியில்தான்
சொல்லப்படுகிறது. அக்கதை
நம்பத் தகுந்ததாகவும்
நியாயமானதாகவும் இருக்கிறது.
படத்தில் பல இடங்களில் கைதட்டி ரசிக்க
வைக்கும் வசனங்களும் காட்சிகளும்
உள்ளன. நாயகனும் காவல்துறை
அதிகாரியும் (ஜான் விஜய்)
பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகள்
ரசிக்க வைக்கின்றன. நாயகனுக்கும்
முதல்வருக்கும் இடையிலான
காட்சிகளில் வசனங்கள் சபாஷ்
போடவைக்கின்றன. உள்துறை அமைச்சர்
அரசின் மது விற்பனை கொள்கை
பற்றி உளறி
மாட்டிக்கொள்ளும் காட்சி
பலத்த கைதட்டல்களைப் பெறுகிறது.
ஒரு பரபரப்பான ஸ்கூப் கிடைக்கும்போது
பொதுநன்மை கருதி அதை ஒரு
பத்திரிகையாளர் வெளியிடாமல்
இருப்பது, இன்னொரு
பத்திரிகையாளர் எழுப்பும்
புத்திசாலித்தனமான கேள்வியை வைத்து
காவல்துறை அதிகாரிகள்
குற்றவாளிகளை நெருங்குவது என
சின்னச் சின்ன விஷயங்களில்
இயக்குனர் ஷரத்தின்
புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
முதல் பாதியில் வரும்
ரொமான்ஸ் காட்சிகள்
ஆயாசத்தை தருகின்றன. அவை
எழுதப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும்
சரியில்லை. பிற்பாதியில் அதே
காட்சிகளின் உண்மையான பின்னணி
வெளிப்படும்போது இந்தக் குறைகள்
மறந்துபோகின்றன. இருந்தாலும் கதைப்படி
பொது இடங்களில் நடக்கும்
காட்சிகள் ஸ்டூடியோவுக்குள்
செட்போட்டு எடுக்கப்பட்டிருப்பது
அப்பட்டமாகத் தெரிகிறது. கலை
இயக்குனர் கவனித்திருக்கலாம்.
இயக்குனரும் அவரது குழுவினரும் சற்று
கவனமாக இருந்திருந்தால்
தவிர்த்திருக்கக் கூடிய குறைகளும்
இருக்கின்றன. படத்தில் எழுத்துக்களாக
வரும் பல விஷயங்களில் எழுத்துப்
பிழைகள் உள்ளன.
படத்தில் சினிமாத்தனமான
திருப்பங்களும் லாஜிக் மீறல்களும்
இருந்தாலும் அவை
பொறுத்துக்கொள்ளத்
தக்க அளவிலேயே இருக்கின்றன. முதல்வரை
மீட்பதற்கான தேசிய பாதுகாப்புப்
படையின் முயற்சி தோல்வியடைவதை இன்னும்
கொஞ்சம் நம்பும்படியாகச்
சித்தரித்திருக்கலாம்.
பாபி சிம்ஹா சமூக அக்கறை உள்ள
கோபக்கார இளைஞர் பாத்திரத்துக்கு
சரியாகப் பொருந்துகிறார்.
சமகாலப் பிரச்சனைகளைப் பற்றிய
வசனங்களைப் பேசும்போது அதற்குத்
தேவையான சீரியஸ்னசைக்
கொண்டுவருகிறார். ஆனால்
அவரது தமிழ் உச்சரிப்புதான்
பெரும் சிக்கலாக இருக்கிறது.
அதேபோல் அவரது ரோல் மாடல்
ரஜினிகாந்தை நினைவுபடுத்தும் தோரணைகள்
மற்றும் உடல்மொழியை
குறைத்துக்கொண்டால்
நன்றாக இருக்கும்.
முதல்வராக நடித்திருக்கும் பிரகாஷ்
ராஜ் ஒரு அறைக்குள் அகப்பட்டராக
வருகிறார். வசன உச்சரிப்பு, நடிப்பு
ஆகியவற்றில் வழக்கம்போல்
அசத்துகிறார். உள்துறை அமைச்சராக
நடித்திருக்கும் இளவரசு அண்மைக்
காலங்களில் வெயிட்டான
வேடங்களில் சிறப்பாக
நடித்துவருகிறார். அந்த வரிசையில்
இந்தப் படமும்
சேர்ந்துகொள்ளும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜான்
விஜய்யின் நடிப்புத் திறனுக்கு ஏற்ற
வேடம் கிடைத்திருக்கிறது. திருநல்வேலியைச்
சேர்ந்த கோபமும் புத்திசாலித்தனமும்
நிறைந்த காவல்துறை அதிகாரியாக
சிறப்பாக நடித்திருக்கிறார்.
பத்திரிகையாளராக வரும் நாயகி
நிக்கி கல்ராணி வெறும் அழகுப்
பதுமையாக நாயகனின் காதலியாக
இல்லாமல் இருப்பது ஆறுதல்.
பாலா சரவணன் நகைச்சுவை
மட்டுமல்லாமல் தன் நடிப்புத்
திறமையையும் நிரூபிக்கும் வாய்ப்பை நன்கு
பயன்படுத்தியுள்ளார். நாசர்,
கருணாகரன் ஆகியோர் கவுரவத்
தோற்றத்தில் வந்து மனதில்
இடம்பெறுகிறார்கள்.
லியோன் ஜேம்ஸின் பாடல்கள் கேட்பதற்கு
இனிமையாக இருந்தாலும் முதல்
பாதியில் அவை வரும் இடங்கள்
திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.
பின்னணி இசையை பிரமாதமாக
வழங்கியிருக்கிறார் இந்த இளைஞர்.
ஃபிலிப் ஆர். சுந்தர் மற்றும்
வெங்கட்.எம் ஆகியோரின் ஒளிப்பதிவு
படத்துக்குத் தேவையானதைத் தந்துள்ளது.
ஆனால் சில காட்சிகள் குறைந்த
தரத்தில் படம்பிடிக்கப்பட்டிருப்பதாகத்
தோன்றுகிறது. கெவினின்
படத்தொகுப்பில்
குறையொன்றுமில்லை.
அரசியல் பிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில்
சரியான விருந்து ‘கோ 2’. ’எனக்கு
அரசியலே தெரியாது, பிடிக்காது’
என்பவர்களும் ஒரு
பொழுதுபோக்குப் படமாக இதை
ரசிக்க முடியும்.
Rating : 3.0 / 5.0

Pencil Review-indiaglitz


வெகு நாட்களாக தயாரிப்பில்
இருந்த 'பென்சில்' படம் ஜி வி
பிரகாஷ்குமாரின் அறிமுக படம்
என்பதால் மிகுந்த
எதிர்பார்ப்புகளுடன்
வெளிவந்திருகிறது. அறிமுக
இயக்குனர் மணி நாகராஜ் பள்ளியில்
நடக்கும் ஒரு கொலை மர்ம கதையை
கையில் எடுத்து ஓரளவுக்கு வெற்றியும்
கண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு
பன்னிரெண்டாம் வகுப்பு
மாணவனை ஒரு மர்ம நபர்
பென்சிலின் கூர்மையான
முனையினால் கழுத்தில் சரமாரியாக
குத்தி கொல்கிறான்.
பின்னோக்கி செல்லும் கதையில்
கொலை செய்யப்பட்ட
மாணவன் நிதின் (சாரிக் ஹசன்)
எல்லா கெட்ட குணங்களும்
கொண்ட, ஒரு சினிமா சூப்பர்
ஸ்டாரின் மகன் என்றும் அவனுக்கு நேர்
எதிர் குணம் கொண்ட நல்ல
பிள்ளை சிவா (ஜி வி
பிரகாஷ்குமார்)வுடன் சதா
பகைமையுடன் இருப்பதும் தெரிய
வருகிறது. சிவா, மாயா (ஸ்ரீ
திவ்யா) என்கிற சக மாணவியை ஒரு
தலையாய் காதலிக்க அவள் அவனை
அலட்சியப்படுத்துகிறாள்.
பள்ளி ஆசிரியர் ஒருவரும் அதே பள்ளியில்
வேலை செய்யும் டீச்சரும் காதலர்கள்
இருவரும் பள்ளி நீச்சல் குள
குளியலறையில் தப்பாக நடந்து
கொள்ள நிதின் அதை ரகசிய
காமிராவில் படம் பிடித்து பிளாக்
மெயில் செய்ய
ஆரம்பிக்கிறான். அதே போல பல சக
மாணவிகளுடனும் உல்லாசமாக
இருக்கும் வீடியோக்களை வைத்து மிரட்டி படிய
வைப்பது வாடிக்கை. இடைவேளையின் போது
சிவா தான் அவனை
கொன்றிருப்பான் என்று
சந்தேகம் வலுக்க அவன் மீது இப்போது
காதல் கொள்ளும் மாயா
யாரும் நிதினின் உடலை
பார்ப்பதற்குள்  உண்மையான
குற்றவாளியை கண்டுபிடிக்க புறப்பட
அது நடந்ததா என்பதே மீதி கதை.
முதல் படமாயிற்றே ஜி வி
சொதப்பியிருப்பார் என்று
நினைத்துகொண்டு அரங்கிற்குள்
செல்பவர்க்கு இன்ப அதிர்ச்சியாக
பள்ளி மாணவனின் உடம்புக்குள்
புகுந்தது போல இயல்பான நடிப்பை
பார்க்கமுடிகிறது. ஒரே குறை அவருக்கு
இந்த பென்சிலில் அதிக
வேலையில்லாமல் போனதுதான்.
'வருத்தபடாத வாலிபர் சங்கம்'
படத்தில் கிராமத்து பள்ளி
மாணவியாக கலக்கிய ஸ்ரீ திவ்யா
இதில் நகரத்து சீருடையில் சற்றே
முதிர்ச்சியாக தெரிகிறார்
ஆனாலும் தன்னுடைய வசீகர
முகபாவனையால் சமாளிக்கிறார்.
ரியாஸ் கான் மற்றும் உமா
ரியாஸ் கான் தம்பதியரின் மகன்
சாரிக் ஹசன் வில்லத்தனத்தில்
மின்னுகிறார் வரவேற்கபடவேண்டிய
நல்ல அறிமுகம். சாரிக்கால்
அந்தரங்க வீடியோ வைத்து மிரட்டப்படும்
பள்ளி ஆசிரியையாக வரும் சுஜா வருணீ
நல்ல நடிப்பை
வெளிபடுதியிருகிறார். ஊர்வசி, வி
டி வி கணேஷ், டி பி கஜேந்திரன் மற்றும்
அபிஷேக்  போன்ற பண்பட்ட நடிகர்கள்
கொடுத்த வேலையை சரியாக
செய்துள்ளனர். ஜி வியின்
நண்பனாக வரும் பையன் காமடிக்கு
அவ்வப்போது உதவுகிறான்.
ஜி வி பிரகாஷின் பின்னணி இசை
படத்துக்கு பெரிய பலம் ஆனால்
பாடல்கள் அவ்வளவாக
கவரவில்லை. கோபி அமர்நாத்தின்
காமிரா மற்றும் ஆண்டனியின்
எடிட்டிங் சிறப்பு. அறிமுக இயக்குனர்
மணி நாகராஜ் தமிழில்
அவ்வளவாக பார்த்திராத கதை
களத்தைக் கையில் எடுத்து முக்கால்வாசி
படத்தை விறுவிறுப்புடன் தந்திருக்கிறார்.
பள்ளி மாணவியான ஸ்ரீ திவ்யா
கதைபுத்தகங்கள் படித்த அனுபவத்தில்
கொலையாளியை கண்டுபிடிக்க
எடுக்கும் முயற்சிகள் நம்பும்படியாக
இல்லை. மேலும் அதுவரை சீராக
சென்றுகொண்டிருக்கும்
திரைக்கதை அதற்கு பிறகு லாஜிக்
மீறல்களால் அடிவாங்குகிறது.
இடையில் சமுத்திரகனி பாணியில்
தனியார் பள்ளிகளை சாடுவதும் இந்த
கதைக்கு பலம் சேர்ப்பதை விட
சறுக்கலாகவே திகழ்கின்றன. கடைசியில்
நிஜ கொலையாளி
யாரென்பதும்
கொலைக்கான காரணமும்
மனதை பாதிக்கவில்லை .
குறைகள் இருந்தாலும் பென்சில்லில்
கூர்மை இருப்பதால் ஒரு முறை
தாராளமாக பார்க்கலாம்.
Rating : 2.8 / 5.0

Saturday 7 May 2016

24 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

24 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்சூர்யா நடித்த ’24’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தின் வசூலும் திருப்திகரமாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 100க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டதில் ரூ.60,00,000 வசூல் ஆகியுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் ரூ.6 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாசிட்டிவ் விமர்சனங்கள், தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் போட்டிக்கு எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகாதது ஆகியவை இந்த படத்திற்கு பலமாக இருப்பதால் இந்த படத்தின் வசூல் இன்றும் நாளையும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
via cine coffee

கௌதம் மேனன் – தனுஷ் படம் எப்போது ரிலீஸ்?

enai noki paayum thotta-dhanush யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென கௌதம்மேனன் & தனுஷ் பட அறிவிப்பு வெளிவந்தது. ஒருபுறம் சிம்புவை நாயகனாக வைத்து தான் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்க, இன்னொருபுறம் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைத் துவங்கினார் கௌதம். ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேக்னா ஆகாஷ், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் தனுஷுக்கும் ஜோடியாகியிருக்கிறார். அதோடு முக்கிய வேடமொன்றில் ‘பாகுபலி’ ராணாவும் நடிக்கிறார்.ஜோமோன் டி.ஜான்சன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மலையாளத்தில் புகழ்பெற்ற இவர் ஏற்கெனவே தமிழில் ‘பிரம்மன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதத்திற்குள் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதன்பிறகு சின்னச் சின்ன பேட்ஜ் ஒர்க்கிற்கான படப்பிடிப்பு மட்டும் நடைபெறும் எனத் தெரிகிறது. ஜூலை 28ல் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படத்தை தீபாவளி வெளியீடாகக் கொண்டு வந்தால், பெரிய அளவு வசூலாகும் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோகஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தார்.

24 படத்தால் தெறி படத்தின் சாதனைக்கு செக்?

24_theri001தெறி படம் ஓவர்சீஸில் வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் மலேசியாவில் வசூலில் 10வது இடத்திற்கு வந்துள்ளது.
இந்தியா மதிப்பில் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது. மலேசியாவில் கத்தி படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம்.
இந்த வாரம் 24 படம் வருவதால், இந்த சாதனையை தெறியால் முறியடிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது

Friday 6 May 2016

கேரளாவில் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா…!

கேரளாவில் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா…!தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். இவரது தெறி படம் வெளியான சமயத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளியாகவில்லையாம்.
இந்நிலையில் சூர்யா, 3 வேடங்களில் நடித்துள்ள 24 படம் இன்று உலகமெங்கும் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.
கேரளாவின் விநியோக உரிமையை பெற்றுள்ள சோபானம் ஃபிலிம்ஸ் நிறுவனம் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகிறது.
ஏற்கெனவே, தமிழகத்தை அடுத்து ஆந்திராவில் சூர்யாவுக்கு நல்ல மார்கெட் உள்ளது.
தற்போது கேரளாவில் விஜய்க்கு போட்டியாக இவர் களம் இறங்குகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நினைவுகளை இழந்தவர் கபாலியால் மீண்டு வந்த அதிசயம்…!

நினைவுகளை இழந்தவர் கபாலியால் மீண்டு வந்த அதிசயம்…!ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்போது அத்தனை ரசிகர்களையும் படம் பற்றி ஆவலாய் அறிய இழுப்பது அப்படத்தின் போஸ்டர்கள்தான்.
இதுபோல்தான் கபாலி படத்தின் போஸ்டர் டிசைன்களும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இதற்கு காரணமானவர் சென்னையை சேர்ந்த வின்சி ராஜ் என்பவர்தான்.
இவர் அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களுக்கும் போஸ்டர் டிசைன் செய்துள்ளார்.
பிசிஏ படித்துவிட்டு, விஸ்காம், டிஜிட்டல் கம்யூனிகேஷனில் முதுகலைப் பட்டம் வென்ற இவர் விளம்பரத் துறையில் பணியாற்றி இருக்கிறார்.
இவருடைய ‘டாக் தெம் டெட்’ என்ற விளம்பர டிசைன் உலகளவில் சென்ற நூற்றாண்டில் சிறந்த 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இதனிடையில், ஒரு விபத்தில் தன் நினைவுகளை 70% இழந்து படுத்த படுக்கையாகி விட்டாராம்.
அதன்பின்னர் கொஞ்ச கொஞ்சமாக இவருக்கு நினைவுகள் திரும்பியதாம். இதனால் மறுபடியும் ஃபோட்டோஷாப் முதல் அத்தனை டிசைன் சாஃப்ட்வேர்களையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.
அதன்பின்னர் கபாலி படத்திற்காக மீண்டும் ரஞ்சித் இவரை நாடி வந்திருக்கிறார்.
அதன்பின்னரும் காலஅவகாசம் கேட்டு, கபாலி பட போஸ்டர்களை உருவாக்கி இருக்கிறார்.
தீவிர ரஜினி ரசிகரான இவர் கபாலிக்காக நிறைய டிசைன்களை செய்து அதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறாராம்.

திறமையும் முக்கியம்: நிக்கி கல்ராணி

201605061547101808_nikki-galrani-says-Important-than-beauty-work-and-talent_SECVPFநிக்கி கல்ராணி விரைவில் வெளியாக இருக்கும் ‘கோ–2’ படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது…
“தேர்தல் நெருங்கி வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசியலையும், ஊடகத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள கோ 2 திரைப்படம் நிச்சயம் மக்களின் மனதில் ஒரு விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு படத்தில் நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு ஆர்வம் கிடையாது. அப்படி புதுப்புது வேடங்களையும், பலபல கதாப்பாத்திரங்களையும் நான் தேடி சென்ற போது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு தான் கோ 2.
இந்த படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாப்பாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம், அவர்கள் எப்படி மைக்கை பிடிக்கிறார்கள் என்பது முதல் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.
என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது. உழைப்பும் திறமையும் மிக மிக முக்கியம்” என்றார்.

அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது

201605061215508518_Ajith-Veeram-Vedhalam-movie-remake-in-telugu_SECVPFஅஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த இரண்டு படத்தையும் ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருந்தார். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கே வழங்கியுள்ளார் அஜித்.
இந்நிலையில், ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடிக்க பவன் கல்யாண் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சர்தார் கப்பார் சிங்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
அந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் இந்த படங்களில் அவர் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ‘வீரம்’ படத்தை தெலுங்கில் ‘ஜில்லா’ இயக்குனர் நேசன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. பவன் கல்யாண் தற்போது தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபிறகு ‘வீரம்’ ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது

24 Movie Review - காலத்தின் பிரம்மாண்டம்-IndiaGlitz

சூர்யா, ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பெயர்களே ‘24’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. இது ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. டீசர், ட்ரைலர்களைப் பார்த்தபின் உண்மையிலேயே இது மிகப் பெரிய மிகப் புதிய படமாக இருக்கும் என்று பார்த்த அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை நிறைவேறியுள்ளதா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
 
கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும் சக்தி படைத்த கைக் கடிகாரத்தைச் சுற்றி நடக்கும் கதைதான் ‘24’. அதைக் கண்டிபிடிக்கும் விஞ்ஞானி சேதுராமன் (சூர்யா). அதை அவரிடமிருந்து பறிக்க முயல்கிறான் அவரது அண்ணனான ஆத்ரேயா (சூர்யா). அந்த கடிகாரத்துக்கான ஆத்ரேயாவின் தேடல் அடுத்த தலைமுறை வரை நீள்கிறது.
 
சேதுராமனின் மகன் வாட்ச் மெக்கானிக் மணி (சூர்யா)யிடம் இருக்கும் கடிகாரத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறான் ஆத்ரேயா. அந்த கடிகாரத்துக்கு என்ன ஆகிறது, அதை வைத்திருப்பதால் இந்த மூவரின் வாழ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ஆகியவற்றைச் விவரிக்கிறது மீதிப் படம்.
 
முதலில் இதைச் சொல்லிவிடுகிறோம். பல்வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் டைம் ட்ராவல் என்ற கற்பனை அம்சத்தை மையமாகக் கொண்டிருக்கும்  ‘24’ படம், மிகப் புதுமையானதும் மிகுந்த திருப்திகரமானதுமான அனுபவத்தைத் தருகிறது.   இந்த டைம் ட்ராவல் என்ற விஷயம் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதல்ல. கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தில் இதே விஷயம் சுவாரஸ்யமாகக் கையாளப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான பாத்திரங்களில் சூர்யாவின் மிகச் சிறப்பான நடிப்பு, ரகுமானின் கச்சிதமான இசை, ஒளிப்பதிவாளர் திருவின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு, உயர்தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஆகியவை ‘24’ படத்தை மிகச் சிறப்பானதொரு அனுபவமாக ஆக்குகின்றன.
 
முதல் ஷாட்டிலிருந்து படத்தின் கதை தொடங்கிவிடுகிறது. சேதுராமன், கடிகாரம் கண்டுபிடிப்பதற்கான அவரது ஆய்வு, அவரது சிறிய குடும்பம் ஆகியவை அறிமுகப்படுத்துகின்றன. சில நிமிடங்களிலேயே வில்லன் ஆத்ரேயாவின் பாத்திரம் பதைபதைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் 20 நிமிடங்களில் ஒரு அபாரமான சேஸிங் காட்சி இடம்பெற்றுவிடுகிறது.
 
கதை எதிர்காலத்துக்கு நகர்கிறது (பார்வையாளர்களுக்கு நிகழ்காலம்). அதோடு சென்டிமெண்ட் , காமடி, காதல் போன்ற மென்மையான அம்சங்களுக்கும் களம் அமைக்கப்படுகிறது. நாயகன் மணி தன்னிடம் இருக்கும் கடிகாரத்தின் அரிய சக்திகளை தெரிந்துகொள்ளும் காட்சிகள் மிகச் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. குறிப்பாக இந்த டைம் டிராவல் விஷயத்தை நகைச்சுவை மற்றும் ரொமான்ஸுக்கும் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் அறிவுக்கூர்மைக்குச் சான்று.
 
ஆத்ரேயாவும் மணியும் சந்தித்துக்கொள்ளும் இடைவேளைக் காட்சியில் திகிலும் சுவாரஸ்யமும் நம்மை ஆட்கொள்கின்றன. இப்படி ஒரு படத்துக்கு இதைவிடச் சிறப்பான இடைவேளைக் காட்சி இருந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடைவேளைக் காட்சிகளில் இதுவும் ஒன்று.
 
இரண்டாம் பாதியில் இன்னும் அதிக ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அடுக்கடுக்காக மர்மங்களும் அந்த மர்ம முடிச்சுகள் எதிர்பார்த்திராத வகையில் விடுபடும் சுவாரஸ்யங்களும் ரசிக்கத் தக்கவையாக இருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளரை ஒரு கோணத்தில் ஊகிக்க வைத்துவிட்டு  முற்றிலும் வேறாக நகர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இயக்குனர். குறிப்பாக இந்த டைம் ட்ராவல் அம்சத்தை குழப்பாமல் சுவாரஸ்யமாக விவரித்த திரைக்கதைக்காக விக்ரம் குமாருக்கு சிறப்புப் பாராட்டுக்கள் உரித்தாகும்.
 
ஆத்ரேயா பாத்திரத்துக்காகவே சூரியாவின் திரைவாழ்வில் அவரது மிகச் சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்றாக ‘24’ நினைவுகூரப்படும். வித்தியாசமான வசன உச்சரிப்பு, பீதியூட்டும் குரல், உடல்மொழி என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார். முதல் முறையாக எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா ஒரு தேர்ந்த வில்லன் நடிகரின் லாவகத்துடன் கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறார். மற்ற இரண்டு பாத்திரங்களிலும் வழக்கம் போல் நன்றாக நடித்திருக்கிறார். 26 வயது இளைஞன் மணியாக சிறப்பாகப் பொருந்துகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கவைக்கிறார். நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வைக்கிறார்.
 
நாயகனின் காதலியாக வரும் சமந்தாவுக்கு மிக வலிமையான பாத்திரம் இல்லை என்றாலும் அவரது நடிப்பும் அழகும் மனதைக்கொள்ளைகொள்கின்றன. படத்தில் அவர் அணியும் உடைகள் அவரை மேலும் இளமையாகக் காட்டுகின்றன. காதலனால் விளையாட்டாக ஏமாற்றப்படும் காட்சிகளில அவரது முகபாவங்கள் ரசிக்கவைக்கின்றன. வில்லன் ஆத்ரேயாவின் நிஜ முகத்தைத் தெரிந்துகொள்ளும் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
 
விஞ்ஞானி சூர்யாவின் மனைவியாக நித்யா மேனனுக்கு மிகச் சிறிய வேடம்தான் என்றாலும் கிடைத்த தன் பாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். சரண்யா வழக்கம்போல் பாசம் நிறைந்த அம்மா வேடத்தில் பிரகாசிக்கிறார்.
 
ரகுமானின் பாடல்கள் காதுக்கு இனிமையாகவும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட விதத்தில் கண்ணுக்குக் குளுமையாகவும் இருக்கின்றன. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். காட்சிக்குத் தேவைப்படும் விதத்தில் மெதுவாகவும் வேகமாகவும், குறைவாகவும் அதிகமாகவும் மாறி மாறி வாசித்து சிறந்த இசையனுபவத்தைத் தருகிறார்.
 
திருவின் ஒளிப்பதிவு படத்தில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது.முழுப்படத்துக்கும் புதுமையானதொரு நிறக்கலவையைப் பயன்படுத்தியிருக்கிறார். காட்சிகள் மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் கண்முன் விரிகின்றன.
 
 பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய  ஆய்வுக் கூடத்தை வடிவமைத்த விதத்தில் கலை இயக்குனர்கள் அமித் மற்றும் சுப்ரதாவின் பிரமிக்க வைக்கும் உழைப்பு வெளிப்படுகிறது.
 
குறைகள் இல்லாமல் இல்லை. படம் முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. டைம் டிராவல் படங்களில் ஒரே காட்சியை இரண்டு மூன்று முறை காட்டுவதற்கான தேவை இருப்பது உண்மைதான். ஆனால் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். செண்டிமெண்ட் காட்சிகளும் காதல் காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் நீண்ட செண்டிமெண்ட் காட்சி பொறுமையை சோதிக்கிறது. நகைச்சுவை ஓரளவு நன்றாக எடுபட்டுள்ளது. அதற்கு வசனங்கள், சூர்யாவின் நடிப்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.
 
தொழில்நுட்ப ரீதியிலும் சில குறைகள் இருக்கின்றன. சென்னையில் நாயகனின் வீடு, அவரது தெரு , கிரிக்கெட் கிரவுண்ட் ஆகியவற்றுக்கான செட்கள் மிக செயற்கையாகத் தோன்றுகின்றன. பல இடங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அப்பட்டமாக வெளிப்பட்டு கண்ணை உறுத்துகிறது. ஆத்ரேயா சேதுராமனின் தலையில் தாக்கும் காட்சி, சூர்யாவும் சமந்தாவும் ஒரு விமான நிலையத்தைக் கடக்கும் காட்சி ஆகியவை இதற்கு உதாரணம்.
 
இருப்பினும் இந்தக் குறைகள், படம் ஏற்படுத்தும் பிரமிப்பை பாதிக்கவில்லை. சூர்யா, ரகுமான், திரு, விக்ரம் குமார், உள்ளிட்டோரின் தீவிர உழைப்புக்காக அதனால் நமக்குக் கிடைக்கும் சிறப்பான அனுபவத்துக்காக ‘24’ படத்தைப் பார்த்தே ஆகவேண்டும்.
 

Rating: 3.3 / 5.0

இன்று முதல் 'றெக்க' கட்டிப் பறக்கப்போகும் விஜய் சேதுபதி - லட்சுமி மேனன

சென்னை: விஜய் சேதுபதி- லட்சுமி மேனன் நடிக்கும் 'றெக்க' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 'நானும் ரவுடிதான்', 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்' என்று ஹாட்ரிக் ஹிட்டடித்து மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதனால் 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்', 'இறைவி', 'மெல்லிசை', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்-வேதா', 'ஆண்டவன் கட்டளை', கே.வி.ஆனந்தின் அடுத்த படம் என முக்கால் டஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன. 
Vijay Sethupathi's Rekka Starts with Poojaஇதில் 'இறைவி', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. 'தர்மதுரை' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் 'றெக்க' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. 
Vijay Sethupathi's Rekka Starts with Poojaஇதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனனும், வில்லனாக ஹரிஷ் உத்தமனும் நடிக்கவுள்ளனர். முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் ஒப்பந்தமாகியிருக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravana Stores Inauguration Stills


Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam
Saravana Stores Inauguration Stills - Cineulagam

24 விமர்சனம்-Cine ulagam

24 விமர்சனம் (வீடியோ இணைப்பு) - Cineulagamகாலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

கதைக்களம்

1990 இல் இரட்டை சகோதர்களான தம்பிசூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும்,
அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.
பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

படத்தை பற்றிய அலசல்

சூர்யா சூர்யா சூர்யா...ஒருவர் இருந்தாலே மிரட்டுவார், இதில் 3 சூர்யா ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கதைக்கு தேவையானதை அழகாக செய்திருக்கிறார்.. அதிலும் ஆத்ரேயா அடுத்த வருட பெஸ்ட் வில்லன் விருது எடுத்து வைக்க வேண்டியது தான். ஆரம்பத்தில் அதிரடியாக களம் இறங்கி பின் கோமாவிற்கு சென்று வீல் சேரில் உட்கார்ந்தாலும் மிரட்டல் தான்.
சூர்யாவே முழுப்படத்தையும் ஆக்ரமிக்கிறார், சமந்தா, நித்யா மேனன் எல்லாம் பெரிதான கதாபாத்திரம் இல்லை. காதல் காட்சிகளில் டைம் மிஷின் பயன்படுத்தியது அழகாக இருக்கிறது.
படத்தின் காட்சியமைப்புக்கள் தான் தனி அப்லாஸ் கொடுக்க வேண்டும், முதன் முறையாக ஒரு ஒளிப்பதிவிற்காக ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். திரு சூப்பர் சார். ஹாலிவுட் தரம். அதிலும் அந்த மிஷினில் சாவி போட்டு திறக்கும் போது அத்தனை நுணுக்கம்...கண்டிப்பாக ஆர்ட் டைரக்ட்ரையும் பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் முதல் 20 நிமிடம் பிரம்மிக்க வைக்கின்றது.
ஏதோ ஸ்டின்பன் ஸ்பில்பர்க் படம் பார்ப்பது போல் இருந்தது. அடுத்தடுத்து அதே அதிரடியை கையாண்டு இருக்கலாம், கொஞ்சம் ஜனரஞ்சக ரசிகர்களுக்காக காதல் காட்சிகள் சேர்த்திருப்பது படத்திற்கு எந்த விதத்தில் பலம் என்று தெரியவில்லை. டைம் மிஷின் மட்டுமின்றி ப்ரீஸ்(freeze) என்ற கான்செப்ட்டும் வருகிறது. அதில் தோனியுடன் செல்பி எடுக்கும் காட்சி எல்லாம் அட்ராசிட்டி. கற்பனைக்கு அப்பாற்பட்டு ரசிக்க வைக்கின்றது.
டைம் மிஷின் என்றால் பல வருடங்கள் பயணம் செய்வதை மட்டும் பார்த்து வந்த நமக்கு 10 நிமிடத்திலிருந்து 1 நாள் வரை முன்னோக்கி பின்னோக்கி செல்லும்படி திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார் விக்ரம் குமார். குறிப்பாகக் கிளைமேக்ஸில் காலம் கடந்து செல்லும் காட்சி. என்ன டைம் மிஷினில் மட்டும் கவனம் செல்லுத்தியிருக்கலாம், காதலை தவிர்த்து...!.
அதிலும் கிளைமேக்ஸ் அரைமணி நேரம் டைம் மிஷினுக்கே உரிய திரைக்கதையில் விளையாடுகிறார். ஏ.ஆர்.ரகுமான் எப்போதும் போல் பின்னணியில் முன்னணி என்று நிரூபித்துவிட்டார்.

களாப்ஸ்

சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது. படத்தின் டெக்கனிக்கல் விஷயம். குறிப்பாக படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் திரு. கிளைமேக்ஸ் அரைமணி நேரம் மற்றும் படத்தின் முதல் பாதி

பல்ப்ஸ்

காதல் காட்சிகள், குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றது.
அடிக்கடி சூர்யா தன்னை வாட்ச் மெக்கானிக் என்று அடிக்கடி சொல்வது சலிப்பை தட்டுகின்றது
மொத்தத்தில் 24 டைம் மிஷினுக்குள் நம்மை அழைத்து சென்று ஒரு விஷ்வல் ட்ரீட்டை கொடுத்துள்ளது
ரேட்டிங்- 3.25/5

Thursday 5 May 2016

Beautiful Look @tamannaahspeaks at the #SaravanaStores Launch

#LakshmiMenon Looking Gorgeous.. @lakshmi_offl

கார்த்தி பிறந்த நாளில் காஷ்மோரா பர்ஸ்ட்லுக்….


கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ” காஷ்மோரா”. இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் விவேக் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் 3டி பேஸ் ஸ்கேன் டெக்னாலஜியை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை கார்த்தியின் பிறந்த நாளான மே 25ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...