Tuesday 19 July 2016

கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்: லட்சுமிமேனன்

கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்: லட்சுமிமேனன்

கிராமத்து பெண் வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் லட்சுமிமேனன்.
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘கொம்பன்’ படங்களில் இவர் நடித்த பாத்திரங்களில் அப்படியே பொருந்தினார். கிராமத்து பெண் வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார் என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதனால் லட்சுமிமேனனுக்கு கிராமத்து பெண் வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தற்போது விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலும் லட்சுமிமேனன் கிராமத்து பெண்ணாகவே வருகிறார். இந்த வேடங்களில் சிறப்பாக நடிப்பது எப்படி? என்பது குறித்து லட்சுமிமேனன் கூறும்போது…
“நான் படப்பிடிப்புக்காக கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களுடன் சாதாரணமாக பழகுவேன். அப்போது அவர்களுடைய பேச்சு, பழக்கம், உடல் அசைவு போன்றவற்றை கவனமாக பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்வேன்.
நடிக்கும்போது கிராமத்து பெண்களின் அசைவுகளை அப்படியே பிரதிபலிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்கும் படங்களில் கிராமத்து பெண்களை மனதில் நிறுத்தி அதுபோல் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்.
என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். என்றாலும், கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதற்கு நான் பழகிய கிராமத்து பெண்களே எனக்கு முன் உதாரணம்” என்றார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...