Tuesday 26 July 2016

2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன.
ஷங்கர் இதற்கான திரைக்கதையை உருவாக்கி ரஜினிகாந்தின் சம்மதத்தையும் பெற்றார். ரூ.350 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்க முடிவானது. இதில் கதாநாயகியாக நடிக்க எமிஜாக்சனும் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் படப்பிடிப்பு தொடங்கியது. வடபழனி ஸ்டூடியோக்கள், அடையாறு போட் கிளப் போன்ற பகுதிகளிலும் ரஜினிகாந்த் நடிக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லனாக வரும் அக்‌ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள்.
பின்னர், ரஜினிகாந்த் கபாலி பட வேலைகளில் ஈடுபட்டதால் 2.0 படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் ரஜினிகாந்த் இல்லாமல் மற்ற நடிகர்-நடிகைகள் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தன.
50 சதவீத படப்பிடிப்புகளை முடித்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் கூறினார். இந்த நிலையில், அமெரிக்காவில் ஓய்வுக்காக சென்ற ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் அவருக்காக காத்திருந்த 2.0 படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள்.
ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தற்போது கபாலி படம் திரைக்கு வந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து 2.0 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படப்பிடிப்பு குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.
பூந்தமல்லி அருகே பலகோடி ரூபாய் செலவில் சென்னை நகரம் போன்ற அரங்கு அமைத்துள்ளனர். இந்த அரங்கில் பலமாடி கட்டிடங்கள், தார் ரோடுகள், கடை வீதிகள், வணிக வளாகங்கள், ரெயில் நிலையம், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவை அரங்குகளாக அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த அரங்கில் ஓரிரு வாரத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் 2.0 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.201607260924281555_Rajinikanth-again-acting-film-enthiran-2_SECVPF

Wednesday 20 July 2016

கபாலி படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க படக்குழுவுக்கு ஏற்பாடு செய்த சிம்பு

201607201558174248_Simbu-surprise-AAA-team-for-kabali-tickets_SECVPF
சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற ஜுலை 22-ந் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாகவுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிம்பு, தனது படக்குழுவினர் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியே பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தள்ளது. சிம்பு, ரஜினி மற்றும் அஜித் படங்கள் வெளியானால் முதல்நாளே முதல் காட்சியே பார்த்துவிடும் வழக்கம் உடையவர். அதன்படி, இந்த முறை ரஜினியின் படம் வெளியாகும் நாளில் தனது படக்குழுவினர் அனைவருக்கும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது

ஒருவாரத்துக்கு முன்னதாகவே ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்

201607201348586111_Thirunaal-release-date-preponed_SECVPF
‘ஈ’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா-நயன்தாரா ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் என்பவர் இயக்கியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. எப்போதோ வெளியாகவேண்டிய இப்படத்தை வரும் ஆகஸ்ட் 12-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ஆகிய ‘வாகா’ ஆகிய படங்கள் வெளியாவதால் பலத்த போட்டி நிலவியது.
எனவே, இந்த போட்டியில் இருந்து யார் பின்வாங்குவார்கள்? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதன்முதலாக ‘திருநாள்’ பின்வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என கூறப்பட்ட ‘திருநாள்’, தற்போது ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் மீனாட்சி, கருணாஸ், ‘நீயா நானா’ கோபிநாத், சரத் லோகிதாஸ்வா, ஜோ மல்லூரி உள்ளிட்டோரும் நடித்தள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கோதண்டபானி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

கபாலி குறித்து விஜய் சொன்னது என்ன?

201607201510295800_Vijay-talks-about-kabali_SECVPF
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தில் உள்ளவர்களும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு எடிட்டிங் பணியை மேற்கொண்ட பிரவீன் கே.எல்., சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் விஜய் ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கிறது என்று விஜய் ஆர்வத்துடன் கேட்டாராம். அதற்கு பிரவீன், ரொம்பவும் சூப்பராக வந்துள்ளது. தளபதி, பாட்ஷாவைவிட ஒருபடி மேலே இருக்கும் என்று கூறினாராம்.
இதைக்கேட்டு வியந்துபோன விஜய், “தலைவர் படம்னா சும்மாவா… கண்டிப்பா நல்லா வரும்…’ என்ற கூறியுள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரவீன் கே.எல்., தெரிவித்தார். விஜய்யும் ‘கபாலி’ படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பது இதிலிருந்து தெரிகிறது

Tuesday 19 July 2016

கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்: லட்சுமிமேனன்

கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்: லட்சுமிமேனன்

கிராமத்து பெண் வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் லட்சுமிமேனன்.
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘கொம்பன்’ படங்களில் இவர் நடித்த பாத்திரங்களில் அப்படியே பொருந்தினார். கிராமத்து பெண் வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார் என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதனால் லட்சுமிமேனனுக்கு கிராமத்து பெண் வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தற்போது விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலும் லட்சுமிமேனன் கிராமத்து பெண்ணாகவே வருகிறார். இந்த வேடங்களில் சிறப்பாக நடிப்பது எப்படி? என்பது குறித்து லட்சுமிமேனன் கூறும்போது…
“நான் படப்பிடிப்புக்காக கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களுடன் சாதாரணமாக பழகுவேன். அப்போது அவர்களுடைய பேச்சு, பழக்கம், உடல் அசைவு போன்றவற்றை கவனமாக பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்வேன்.
நடிக்கும்போது கிராமத்து பெண்களின் அசைவுகளை அப்படியே பிரதிபலிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்கும் படங்களில் கிராமத்து பெண்களை மனதில் நிறுத்தி அதுபோல் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்.
என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். என்றாலும், கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதற்கு நான் பழகிய கிராமத்து பெண்களே எனக்கு முன் உதாரணம்” என்றார்.

கபாலி சென்னை-செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

201607181059091077_Kabali-chennai-chengalpattu-areas-distribution-acquired-SPI_SECVPFரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி பிரம்மாண்டமாக வெளிவருகிறது. இப்படத்தை வாங்கி வெளியிட பல்வேறு விநியோகஸ்தர்களும் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ‘கபாலி’ படத்தின் வெளியீட்டு உரிமையை ஏற்கெனவே ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.201607181059091077_Kabali-chennai-chengalpattu-areas-distribution-acquired-SPI_SECVPF
அதைத் தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு ஏரியா வெளியீட்டு உரிமையை ஏ.ஜி.எஸ்., நிறுவனமும், சென்னை வெளியீட்டு உரிமையை எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனமும் வாங்கியுள்ளது. எஸ்.பி.ஐ.சினிமாஸ் கடந்த சில தினங்களுக்கு ‘கபாலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல்நாள் காட்சிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்திற்காக சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கே ‘கபாலி’ சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது. சிறப்பு காட்சிகளில் டிக்கெட் விலை ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் எனவும் தெரிகிறது

சாந்தனு பட டீசரை வெளியிடும் ஜெயம்ரவி

சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘முப்பரிமாணம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இயக்குனர்கள் கதிர், பாலா ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ரொமான்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் அப்புக்குட்டி நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இப்பட201607191525289124_Jayamravi-launches-shanthanu-movie-teaser_SECVPFத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்தார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது உருவாகியுள்ளது. இந்த டீசரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் ஜெயம் ரவி வெளியிடவுள்ளார். இதனை சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இப்படத்தை சமயாலயா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் விசு மற்றும் வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 27 பிரபல நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday 13 July 2016

20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் அமிதாப் பச்சன்

அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அண்மையில் அட்லியை நேரில் வரவழைத்து பேசிய அஜித், தனக்கேற்ற கதை இருக்குமாறு கேட்டதாகவும், அதன்பிறகு அட்லி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும், அந்த கதையில் நடிக்க அஜித் விரும்பியதாகவும் கூறப்பட்டது.201607121624110267_amitabh-bachchan-joint-with-ajith-after-20-years_SECVPF
இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கெனவே 1996-ஆம் ஆண்டு தமிழில் அஜித்-விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘உல்லாசம்’ படத்தை தயாரித்துள்ளார்.
அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு, தமிழில் எந்த படமும் தயாரிக்காத அமிதாப் பச்சன், 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் படம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா வில்லன் இப்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அயன்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆகாஷ்தீப் சைகல். சேட்டு வீட்டு பையனாக நடித்திருந்த ஆகாஷ்தீப் சைகல் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். சூர்யாவுக்கு வில்லனாக நடித்த ஆகாஷ்தீப் சைகல் தற்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்.201607121528429392_Suriya-movie-villain-next-vijay-sethupathi-villain_SECVPF
விஜய் சேதுபதி-டி.ராஜேந்தர் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஆகாஷ்தீப் சைகல் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் கே.வி.ஆனந்த் தான் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது. மடோனா செபஸ்டியான் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்

Monday 11 July 2016

Tamil Cinema News: தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

Tamil Cinema News: தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்: சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படு...

என் மனதை பாதித்த சம்பவங்களையே அப்பா படத்தின் கதையாக உருவாக்கினேன்: சமுத்திரக்கனி

திரைப்பட இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் அப்பா. இந்த திரைப்படம் ஈரோட்டில் 3 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. ரசிகர்களை கவர்ந்து உள்ள அப்பா திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வகையில் சமுத்திரக்கனி மற்றும் அப்பா திரைப்பட நடிகர் குழுவினர் 8-ந்தேதி ஈரோடு வந்தனர்.201607111054599541_affected-my-mind-appa-movie-developed-story-Samuthirakani_SECVPF

பின்னர் அவர்கள் திருப்பூர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அப்பா திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதைப்பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. படத்தை பார்ப்பதற்காக குழந்தைகளும், பெண்களும் கூட்டம் கூட்டமாக வருவதை பார்க்கிறேன். அவர்களுக்கான படத்தை எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் நான் இந்த படத்தை எடுத்தபோது பலருக்கும் நம்பிக்கை இல்லை. அப்பா என்ற பெயரே நன்றாக இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்பா என்ற வார்த்தையின் வலிமை தெரியும். எனது கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவேதான் நான் வேறு தயாரிப்பாளரை தேடாமல் நானே நண்பர்கள் உதவியுடன் தயாரித்தேன்.
பொதுவான திரைப்படங்களில் இருப்பதுபோல குத்துப்பாட்டு, சண்டை காட்சிகள் இதில் இல்லை. இதுவே பெரிய குறையாக சிலர் கூறினார்கள். ஆனால் நான் இதுதான் என் படம் என்று கூறி எடுத்தேன். நான் கதை எழுதும்போதே எந்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள் என்று நினைத்தேனோ, அந்த இடத்தில் கைத்தட்டினார்கள்.
எந்த இடத்தில் மனம் கலங்குவார்கள் என்று நினைத்தேனோ, அந்த இடத்தில் கலங்கினார்கள். காரணம் நான் ஒரு ரசிகனாக இருந்து இந்த கதையை எழுதினேன். வேறு யாரிடமும் இருந்து கதையை வாங்கவில்லை. தினசரி நான் பார்க்கும் சம்பவங்கள், என் மனதை பாதித்த சம்பவங்களையே கதையாக உருவாக்கினேன். 1040 மதிப்பெண்கள் வாங்கிய தைரிய லட்சுமி என்ற மாணவியின் தற்கொலை செய்தி என்னை வெகுவாக பாதித்தது. அதைத்தொடர்ந்து வந்த செய்திகளை மனதில் கொண்டு கதையை உருவாக்கினேன்.
இந்த படத்தில் நான் முதலில் கிளைமாக்ஸ் (உச்சக்கட்ட காட்சியை) தான் முதலில் எழுதினேன். அதன் பின்னர் தான் மற்ற காட்சிகள் உருவாக்கப்பட்டன. அதாவது கிளைமாக்சில் இருந்து தொடக்கத்தை நோக்கி எழுதினேன்.
என்னை பொறுத்தவரை இந்த சமூகத்தை உடனடியாக மாற்ற முடியாது என்பது தெரியும். ஊழல் நிறைந்த இந்த சமூகத்தில் உடனடி மாற்றம் என்பது நடக்காது. ஆனால் அடுத்த தலைமுறைக்கு நாம் சிலவற்றை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே எனது கதைகள் அடுத்த தலைமுறைக்கானதாகவே இருக்கும். கற்பனை இல்லாத நிஜமான கதையை கொடுத்த கதாசிரியனாக இந்த படத்தில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன்.
இவ்வாறு திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார்.
பேட்டியின்போது ஈரோட்டை சேர்ந்த நடிகர் நாடோடிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் அப்பா படத்தின் கலைஞர்கள் உடன் இருந்தனர்

சிம்பு படத்தில் அண்ணனுடன் களமிறங்கும் மொட்டை ராஜேந்திரன்

201607111119456804_Mottai-Rajendiran-in-Simbu-AAA-movie_SECVPF‘நான் கடவுள்’ படத்தின் மூலம் இயக்குனர் பாலாவால் வில்லனாக அறிமுகமானவர்தான் மொட்டை ராஜேந்திரன். அதன்பிறகு, ஒருசில படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக நடித்து வந்தவரை, அட்லி தனது ‘ராஜாராணி’ படத்தின் மூலம் காமெடியனாக்கிவிட்டார்.201607111119456804_Mottai-Rajendiran-in-Simbu-AAA-movie_SECVPF

அந்த படத்திலிருந்து தற்போது வரை அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்பவர்களைவிட, காமெடியனாக ஒப்பந்தம் செய்பவர்கள்தான் அதிகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய காமெடிக்காகவே ஓடியது என்றால் அது மிகையாகாது.
அஜித், விஜய் என முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன் தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சிம்பு நடிக்கும் படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் அண்ணன் மாரி மணி என்பவரும் இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே, மஹத், ஸ்ரேயா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தில்லுக்கு துட்டு – திரை விமர்சனம்

சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள்.maxresdefault
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம். கருணாஸ் வைத்திருக்கும் லோடு வேனுக்கு தவணை கட்டாததால் கடன் கொடுத்த சேட்டு, அந்த வேனை எடுத்துச் சென்றுவிடுகிறார்.
இதுபற்றி கருணாஸ் சந்தானத்திடம் முறையிட, சந்தானம் பதிலுக்கு சேட்டுவின் காரை தூக்குவதற்காக சேட்டு வீட்டுக்கு கருணாசுடன் செல்கிறார். அப்போது, சேட்டு மகளான நாயகி சனாயா இவர்களை போலீசிடம் மாட்டி விடுகிறாள்.
இதனால் கடுப்பான சந்தானம் நாயகியை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடிக்கிறாள். அதற்குள் நாயகி சனாயா, சந்தானத்தை தேடி அவரது வீட்டுக்கே வருகிறாள்.
அப்போதுதான் இருவரும் சிறுவயதில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்தவர்கள் என்பதும் தெரிகிறது. இதன்பிறகு, இருவரும் காதலிக்கிறார்கள்.
இந்த விஷயம் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. சந்தானம் வசதியானவன் என்று நினைத்து இவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறார். பின்னர், சந்தானம் வசதியானவர் இல்லை என்று தெரியவந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதன்பிறகு, நாயகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார். அப்போது சந்தானம் உள்ளே புகுந்து அதை கலைத்துவிடுகிறார்.
சந்தானத்தை நேரடியாக எதிர்க்க முடியாத சேட்டு, ரவுடியான நான் கடவுள் ராஜேந்திரனின் உதவியை நாடுகிறார். சந்தானத்தை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜேந்திரன் பலே திட்டம் ஒன்றை போடுகிறார்.
அதன்படி, சந்தானத்திற்கு, சனாயாவை திருமணம் செய்து கொடுப்பதாக நம்ப வைத்து, சிவன் கொண்ட மலையில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை கொலை திட்டம் போடுகிறார்கள்.
அதன்படி, நாயகியின் அப்பா, சந்தானத்தை அந்த பங்களாவுக்கு குடும்பத்தோடு அழைத்து செல்கிறார். ஏற்கெனவே, பேய் இருக்கும் அந்த பங்களாவில் ராஜேந்திரனின் திட்டம் நிறைவேறியதா? அல்லது அங்கிருந்த பேய் இவர்களை ஆட்டுவித்ததா? என்பதை நகைச்சுவையுடன் திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சந்தானம், முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் ஹீரோவுக்குண்டான தகுதியில் கூடியிருக்கிறார். குறிப்பாக, நடனம், சண்டை காட்சிகள் ஆகியவற்றை ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையாக செய்து காட்டியிருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் திகில் படம் என்பதையும் தாண்டி காமெடி சரவெடியாக வெடித்திருக்கிறது.
நாயகி சனாயா புதுமுகம் என்றாலும், நடிப்பில் அது தெரியவில்லை. அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். சேட்டு பெண் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
படம் முழுக்க சந்தானத்துடன் பயணிக்கும் கருணாஸ், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. பேய்க்குப் பயந்து இவர் நடுங்கும் காட்சிகள் எல்லாம் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.
சேட்டுவாக வரும் பாலிவுட் நடிகர் சௌரப் சுக்லாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஹைடெக்கான ரவுடியாக வரும் மொட்டை ராஜேந்திரன், சந்தானத்தை கொல்வதற்கு போடும் திட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை கலாட்டா ஆரம்பிக்கிறது.
படத்தின் இறுதிவரை நகைச்சுவைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். குறிப்பாக உண்மையான பேயிடம் இவர் அடிவாங்கும் காட்சிகள் உச்சக்கட்ட காமெடி.
சந்தானத்துக்கு அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் ஹாலிவுட்டுக்கு இணையாக போடும் கெட்டப்புகள் எல்லாம் அசத்தல். நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.
சின்னத்திரையில் வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பல படங்களை கிண்டல், கேலி செய்த ராம்பாலா, ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை திகில் கலந்து சொல்லியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க நகைச்சுவை விருந்து கொடுப்பது என்பது சவாலான விஷயம். அதை இயக்குனர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
சந்தானத்தை மாஸ் ஹீரோவாக காட்டும் வகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காமெடி படத்திலும் திகில் கலந்து ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.
தமன் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையிலும் திகிலூட்டியிருக்கிறார். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. திகிலூட்டும் காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் நம்மை பயமுறுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ‘தில்லுக்கு துட்டு’ த்ரில்லான ஹிட்டு.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...