Friday, 29 April 2016

சூர்யாவின் 240 கோடி ஆசை

பணம் மீதுள்ள ஆசை யாரை விட்டது? தன்னுடைய 24 படம் 240 கோடிகளை வசூலிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சூர்யா கூறினார்.


 
 
மே 6 -ஆம் தேதி 24 படம் வெளியாகிறது. விக்ரம் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஹ்மான் இசை. இதனை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்தது.
 
படம் வெளியாகும் முன்பே பல கோடிகள் லாபம் வைத்து படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு தந்தார் சூர்யா. அவர் பல கோடிகள் லாபம் வைத்து ஈராஸுக்கு படத்தை விற்றுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, 24 படம் 2150 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 200 கோடி கிளப்பில் சேர வேண்டும், 240 கோடிகள் வசூலிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.
 
இதுக்கு பேரு ஆசையில்லீங்க... பேராசை.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...