Tuesday 27 September 2016

அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்கூடவே நடித்தவர் அப்புக்குட்டி. இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித கப்பல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது. அஜித்தை பற்றி ஒவ்வொரு முறையும் அப்புக்குட்டி புகழ்ந்து வந்தாலும், தற்போது அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அப்புக்குட்டி பீல் பண்ணும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்துள்ளது.
அதாவது, அப்புக்குட்டிக்காக தனியாக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி அவரது கெட்டப்பையே மாற்றியவர் அஜித்தான். அந்த போட்டோ ஷுட்டிற்கு பிறகு அப்புக்குட்டி இப்போது ஹீரோவாக நடிக்கும் ‘காகித கப்பல்’ ஆடியோ விழா நடந்த சமயத்தில் அஜித் அவருக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லியுள்ளார்.
மிகப்பெரிய ஸ்டாரான அஜித், அப்புக்குட்டியை வாழ்த்தியது ரொம்ப பெருமையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாம். அவர் இப்படி வாழ்த்து சொல்வாருன்னு அப்புக்குட்டி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லையாம்.
இப்படத்தில் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும்படி ஒரு பாடல் வைத்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல், அப்புக்குட்டிக்கு டூயர் பாடல் ஒன்று உள்ளதாம். அதில் அப்புக்குட்டி நடனம் ஆடி அசத்தியிருக்கிறாராம்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...