Friday 27 January 2017

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதையா? புதிய தகவல்

விஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் ஒருசில காட்சிகளை 80-களில் நடப்பதுபோன்று காட்சிப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளுக்காகத்தான் விஜய் தற்போது தாடி, முறுக்கு மீசையுடன் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. 80-களில் நடக்கும் காட்சிகளை மதுரையில் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வான நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்கப் போவதாகவும், அதைத் தொடர்ந்து பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...