Tuesday, 30 May 2017

பாகுபலி பிரபாஸுக்கு மார்ச் மாதம் திருமணம்: பொண்ணு

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடித்ததால் பிரபாஸ் புதுப்பட வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை. மேலும் தனது திருமணத்தையும் தள்ளிப்போட்டார். பாகுபலிக்காக அனுஷ்காவும் தனது திருமணத்தை ஒத்தி வைத்தார்.

பாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்கா, பிரபாஸ் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் பற்றி தான் தெலுங்கு திரையுலகில் பேச்சாகக் கிடக்கிறது
சாஹோ

ரபாஸும், அனுஷ்காவும் ரீலில் மட்டும் அல்ல ரியலிலும் அம்சமான ஜோடியாக உள்ளனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவர்களின் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபாஸுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அனுஷ்காவும் திருமண தோஷத்தை கோவிலுக்கு சென்று கழித்துள்ளார். ஆனால் பிரபாஸ் அனுஷ்காவை மணப்பாரா என்று தெரியவில்லை
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹாோ. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை ஹீரோயினாக்க நினைத்தார்கள். ஆனால் பிரபாஸோ அனுஷ்காவை ஹீரோயினாக போடுமாறு பரிந்துரை செய்துள்ளாராம்.

காலா ஷூட் முடிஞ்சதும் நாங்களே அந்த ஜீப்பைத் தர்றோம்! - தனுஷ்

காலா படத்தில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகேந்திரா ஜீப்பில் உக்கார்ந்து இருப்பதுபோல் வெளியானது.
அந்தப் படத்தை ட்விட்டரில் போட்டு, 'தலைவர் உபயோகித்த இந்த ஜீப் பற்றிய தகவல் இருந்தால் தயவுசெய்து எங்களுக்கு தெரிவியுங்கள். அதை வாங்கி எங்கள் நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்க விருப்பப் படுகிறோம்' என்று கூறியிருந்தார்Image result for kala rajini
அதைப் பார்த்த காலா படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் தனுஷ், "மிக்க நன்றி சார், தற்போது அந்த ஜீப்பை படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் ஜீப்பை உங்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்கிறோம்," என்று பதில் கூறியுள்ளார். இந்தியாவில் ஜீப் உற்பத்தியில் மகேந்திரா நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. படத்தில் உபயோகிக்கப்படும் இந்த மாடல் ஜீப் தற்போது உற்பத்தியில் இல்லை. ரஜினி நடித்த ஜீப் என்பதால் அதற்கு தனி அந்தஸ்து கொடுத்து நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்கப் போவதாக, நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதுவரையிலும் இந்தியாவில் எந்த நடிகரும் படத்தில் உபயோகித்த வாகனங்கள் இப்படி மியூசியத்தில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியால் மகேந்திரா ஜீப்புக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது. மீண்டும் அதே மாடல் ஜீப் வெளி வந்தாலும் ஆச்சரியமில்லை.

Read more at: http://tamil.filmibeat.com/news/dhanush-s-reply-mahendra-chairman-046574.html

காலா படத்தில் ரஜினிகாந்துக்கு பேரனாக நடிக்கும் குட்டி ஸ்டார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விடவேண்டும் என வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் இன்றும் உண்டு. இதுவரை அவரை இளமையான ஹீரோவாக காட்டி வந்தார்கள்.
இம்முறை ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி கொஞ்சம் வயதானவராக நடிப்பார் போல. ஷூட்டிங் போட்டோக்களை பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது.
காலாவில் அவருக்கு பேரனாக நடிக்க சிறுவன் மான்யூவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவன் வேறுயாருமல்ல. முன்னணி ஒளிப்பதிவாளரான காதல் கந்தாஸ் என்பவரின் மகன். சூப்பர் ஸ்டாருடன் நடித்தால் மான்யூ ஒரு லிட்டில் ஸ்டார் தானே

‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதி வெளியேறவில்லை; நீக்கினோம்: சுந்தர் சி!

ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து வெளியேறவில்லை; நாங்கள்தான் நீக்கினோம் என்று படத்தின் இயக்குனர் சுந்தர் சி. கூறியுள்ளார்.

சுந்தர் சி இயக்கவுள்ள பிரமாண்டமான சரித்திர படமான ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சுந்தர் சியின் இயக்குனர் டீம் இந்த தகவலை மறுத்துள்ளது
சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் தானாகவே வெளியேறவில்லை. நாங்கள் தான் அவரை படத்தில் இருந்து நீக்கினோம். அவராக இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது பொய்யான தகவல். அவரை இந்த படத்தில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒருசில காரணங்களை கூறியுள்ளோம். மீதி காரணங்களை நாகரீகம் கருது கூறவில்லை. எனவே ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து வெளிவரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்‘ என்று கூறினர்.

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...